ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்மஹால் மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கோபின் சோரனுக்கு ஆதரவாக சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள் முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எளிமையான மக்கள் சந்திப்பு மூலம் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், சின்னஞ்சிறிய கிராமங்களில் கூட சிபிஎம் வேட்பாளர் கோபின் சோரனுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.